மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜன 2019

கனிமொழியுடன் மோதலா? டி.கே.ரங்கராஜன் பதில்!

கனிமொழியுடன் மோதலா? டி.கே.ரங்கராஜன் பதில்!

மாநிலங்களவையில் தனக்கும் கனிமொழிக்கு எவ்வித சண்டையும் நடைபெறவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி, டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதில் பேசிய திமுகவின் கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதா எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்தனர். முன்னதாக மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இது என்ன அநியாயமா இருக்கு என்று கனிமொழி அவருடன் வாக்குவாதம் செய்தார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 10) கனிமொழி, டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கனிமொழி, “பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக எதிர்க்கிறது. இதுதான் திமுகவின் நிலைப்பாடும் கூட. தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்டிருக்கும் ஒரு மசோதாவே தவிர, இதில் வேறு ஒன்றும் இல்லை. அதிமுகவினர் மாநிலங்களவையில் இருந்து மசோதாவை எதிர்த்து வாக்களித்திருக்கலாம். வெளிநடப்பு செய்தது கண் துடைப்பு நாடகம். பாஜகவின் ஆணைக்கிணங்க இவ்வாறு செயல்பட்டுள்ளனர்” என்று விமர்சித்தார். மேலும், “எந்தவித அறிவியல் பின்புலமும் இல்லாமல், உரிய ஆய்வுகளும் செய்யப்படாமல் எப்படி 10 சதவிகிதம் என்கிற எண்ணை அவர்கள் கொண்டுவந்தனர்? 8 லட்சம் ரூபாய் வரம்பு வைத்தால் 97 சதவிகித மக்கள் தொகை அதில் வருகிறது. அப்படியிருக்க இது யாருக்கு உதவப் போகிறது” என்ற கேள்வியையும் கனிமொழி முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய டி.கே.ரங்கராஜன், “மசோதாவை திமுக, ஆர்ஜேடி ஆகிய கட்சிகள்தான் எதிர்த்தன. மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. கனிமொழி சொன்ன அனைத்தும் உண்மைதான். ஆனால் தமிழக நிலைமையும், இந்திய நிலைமையும் வித்தியாசமானது. மாநிலத்திற்கு மாநிலம் நிலைமைகள் வித்தியாசப்படுகிறது. தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் உள்ளது, மற்ற மாநிலங்களில் 50 சதவிகிதம்தான் உள்ளது. இப்படிப்பட்ட வாதங்கள் வரும்போது அகில இந்திய கட்சிகள் சில நிலையை எடுக்க வேண்டி உள்ளது. ஆதரித்ததாக சொல்லக்கூடிய நாங்கள் உள்பட பலரும், அதிலுள்ள கோளாறுகளை சொல்லியிருக்கிறோமே தவிர வரவேற்று எதையும் சொல்லவில்லை. விவாதத்தில் பேசிய 36பேரில் பாஜகவை தவிர அனைவரின் பேச்சும் மசோதாவை எதிர்த்துதான் பேசப்பட்டிருக்கிறது. மசோதாவை ஆதரித்து நான் வாக்களித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 10 ஜன 2019