மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

இந்தியத் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்தியத் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு சென்ற ஆண்டில் அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் இந்தியாவிலிருந்து மொத்தம் 14.56 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டின் இதே காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 12.60 மில்லியன் கிலோ மட்டுமே. மற்ற உலக நாடுகளை விட பாகிஸ்தானுக்குத்தான் அதிகளவு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தேயிலை வாரியத்தின் அறிக்கையின்படி, 2018 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 13.3 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் ஏற்றுமதி அளவை விட 22 சதவிகிதம் கூடுதலாகும்.

இதே காலத்தில் இந்தியத் தேயிலை ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, அர்மேனியா உள்ளிட்ட ரஷ்ய காமன்வெல்த் நாடுகள் 54.87 மில்லியன் கிலோ தேயிலையை மட்டுமே இறக்குமதி செய்துள்ளதால் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் அந்நாடுகள் மொத்தம் 58.41 மில்லியன் கிலோ தேயிலையை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்திருந்தன. மதிப்பு அடிப்படையிலும் ரஷ்ய காமன்வெல்த் நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி ரூ.959 கோடியிலிருந்து ரூ.891 கோடியாகக் குறைந்துள்ளது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்த் ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தேயிலை ஏற்றுமதியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon