மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜன 2019

தோல்வி எதிரொலி: ஹாக்கி பயிற்சியாளர் நீக்கம்!

தோல்வி எதிரொலி: ஹாக்கி பயிற்சியாளர் நீக்கம்!

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் நீக்கப்பட்டுள்ளார்.

ஹாக்கி அணியின் 25ஆவது பயிற்சியாளராக கடந்த ஆண்டு மே மாதம் ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே இந்திய ஜூனியர் ஹாக்கி அணி, பெண்கள் அணி ஆகியவற்றிற்குப் பயிற்சியாளராக செயல்பட்டு அந்த அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். ஆனால் ஆண்கள் அணி இவரது தலைமையில் சிறப்பான வளர்ச்சியை எட்டவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடந்தமுறை சாம்பியனான இந்திய அணி இந்த முறை இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்கத்தை மட்டுமே பெற்றது. அதேபோல், ஒடிசாவில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில், கம்பீரமாகக் காலிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி, அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்நிலையில், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் செயல்திறன் மற்றும் மேம்பாட்டுக்குழு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (ஜனவரி 7) நடைபெற்றது கூட்டத்தின் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு நேற்று (ஜனவரி 9) வெளியானது.

ஹரேந்திர சிங் தற்போது ஜூனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு இவர் பயிற்சியாளராக இருந்த போது ஜூனியர் அணி, உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. அதே போல் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியைக் கவனத்தில் கொண்டும், 2020, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை கவனத்தில் கொண்டும் அணியைத் தயார்படுத்த அவரை இந்தப் பொறுப்பில் நியமித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 10 ஜன 2019