மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜன 2019

மெரினா: கடைகளை அகற்ற உத்தரவு!

மெரினா: கடைகளை அகற்ற உத்தரவு!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 2 ஆயிரம் கடைகளை அகற்றிவிட்டு, குறைவான எண்ணிக்கையில் உரிமத்துடன் புதிய கடைகளை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் மற்றும் மீனவர்கள் மீன் வியாபாரம் செய்வதற்கான மாற்று இடம் வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக மெரினாவில் ஒரு மாதத்திற்குத் தினமும் காவல் ஆணையருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.

இன்று (ஜனவரி 10) இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

தற்போது மெரினாவில் சுமார் 2,000 கடைகள் உள்ளதாகவும், கடலோர ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு உட்பட்டு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரையில் உணவகங்கள், மின் விளக்குகள், சைக்கிள் பாதை, சைக்கிள் நிறுத்துமிடங்கள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த திட்டத்தினால் கடல் ஆமைகள், மீன்கள் பாதிக்கப்படாதவாறு அறிவியல் ரீதியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். கடற்கரையில் மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆணையர், மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், 3 முதல் 4 மாதங்களில் மாற்று இடங்களுக்கு மீனவர்களின் கடைகள் மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 10 ஜன 2019