மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

நாகை: போலி பல்கலைக்கழகத்துக்கு சீல்!

நாகை: போலி பல்கலைக்கழகத்துக்கு சீல்!

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் இயங்கிவந்த போலி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்துக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

கடந்த 12 ஆண்டுகளாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குத்தாலத்தில் போலி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வந்தது. மாற்று மருத்துவம் தொடர்பான சான்றிதழ்கள் இதன் மூலமாக வழங்கப்பட்டதாகத் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இதனை நடத்தி வந்த செல்வராஜ் என்பவர் தலைமறைவானார். அவரைத் தேடி வருகின்றனர் போலீசார்.

இதையடுத்து, இப்போலி பல்கலைக்கழகத்துக்கு இன்று (ஜனவரி 10) சீல் வைத்தனர் தமிழக சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள். சுமார் 1,000க்கும் மேற்பட்டோருக்கு இப்பல்கலைக்கழகம் மூலமாகப் போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாற்று மருத்துவம் தொடர்பாகப் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று சமீபத்தில் நாளிதழ்களில் தகவல் வெளியானது. அது தொடர்பாக, சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு சோதனையிட்டதில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon