மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

நெட்வொர்க் துறையில் அதிகம் செலவிடும் அரசு!

நெட்வொர்க் துறையில் அதிகம் செலவிடும் அரசு!

தொலைத் தொடர்பு உள்கட்டுமான வசதிகள் மற்றும் சேவைகளுக்கு அரசு செலவிடும் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

தொலைத் தொடர்புச் சேவைகள் தொடர்பான வருடாந்திர சரிபார்ப்புச் சோதனையைத் தொலைத் தொடர்பு அமைச்சகம் மேற்கொண்டு அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.60,000 கோடியைத் தொலைத் தொடர்பு உள்கட்டுமான வசதிகள் மற்றும் சேவைகளுக்காக அரசு செலவிட்டுள்ளது. இதற்கு முன்பு 2009 முதல் 2014 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தொலைத் தொடர்புச் சேவைகளுக்காக ரூ.9,900 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருந்தது. இதுதவிர, கிராமப்புறங்களில் பிராட்பேண்ட் இணைப்புக்காக அரசு அதிகளவில் செலவிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் எல்லைப் புறங்களில் பிராட்பேண்ட் இணைப்புத் திட்டத்துக்காக ரூ.10,800 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வைஃபை வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்துக்காகவும் அரசு ரூ.10,000 கோடியைச் செலவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 25,000 ஹாட்ஸ்பாட் மையங்களை அமைத்துள்ளது. பொதுச் சேவை மையங்கள் சார்பாக 7,000 ஹாட்ஸ்பாட் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற மார்ச் மாதத்துக்குள் மேலும் 10 லட்சம் ஹாட்ஸ்பாட் மையங்களை அமைக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புச் சேவைகளுக்கு இந்தியாவில் அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு, இத்துறையின் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த அரசு அதிகமாகச் செலவிட்டு வருகிறது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon