மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

நித்தி வீடியோ தான் டாப்: அப்டேட் குமாரு

நித்தி வீடியோ தான் டாப்: அப்டேட் குமாரு

இந்தப் பக்கம் பார்த்தா பேட்ட டான்னு ஒரு குரூப் கிளம்புது, அந்தப் பக்கம் விஸ்வாசம் டான்னு ஒரு குரூப் கிளம்புது, என்ன ஊருல இருக்குற மொத்த கூட்டமும் இன்னைக்கு தியேட்டர் வாசல்ல தான் நிக்கப்போகுதான்னு நானும் பார்த்துகிட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து தான் நித்தியானந்தா வீடியோ ஒண்ணு ரிலீஸாச்சு. அய்யய்யோ பதறாதீங்க.. பொறுமையா வாங்க, இது வேற மேட்டர்.

என்னப்பா படம் எடுக்குறீங்க நீங்க? தல, தளபதி, சூப்பர் ஸ்டார்ன்னு ஆயிரம் பேர் வந்தாலும் உள்ளூருக்குள்ள தானே நீங்க பிரபலம். ஆனா நித்தி உலக லெவல் பேமஸ்ன்னு அவர் ஆர்மி கெத்து காட்டுது. ஹாலிவுட்டை எல்லாம் தூக்கி சாப்பிட்டாரு மனுசன். எப்பா இந்த ஆஸ்கர், கோல்டன் குளோப்ன்னு என்னல்லாமோ சொல்றீங்களே அதை நம்ம நித்திக்கு கொடுக்கலாம்னு என்னையவே சிந்திக்கவச்சுட்டார். நித்தி வீடியோவை இந்த லிங்கை க்ளிக் பண்ணி பாருங்க.

@Annaiinpillai

பேட்ட திரைப்படம் வெளியானதை அடுத்து சென்னை உட்லாண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற்ற ரஜினி ரசிகரின் திருமணம்#

தம்பி நீங்க தேனிலவே கொண்டாடினாலும் கட்சி அறிவிப்பு வராது!

@Kozhiyaar

ஒரு விடயம்‌ நமக்கு எந்த கோபமும் ஏற்படுத்தவில்லை என்றாலும், 'இப்ப ஜீவா கண்ணு சிவக்கும் பாரு, கையை முருக்குவான் பாரு!' என்று 'பசங்க' பட நண்பர்கள் போல நம்முடன் இருப்பவர்கள் உசுப்பேற்றி விடுகிறார்கள்!!!

@HAJAMYDEENNKS

வரவர தம்பிதுரை தூக்குதுரையாக மாறிக்கொண்டு இருக்கிறார் நாடாளுமன்றத்தில் !

@Kozhiyaar

நம்ம வீட்டில இவ்ளோ சுவையான உணவா என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே பக்கத்து வீட்டு பாத்திரம் திருப்பிக் கொடுக்க எடுத்து செல்லப்படுகிறது!!

@HAJAMYDEENNKS

முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்துவிட்டு விமர்சனம் பண்றவங்களும் முதல் தடவை ஓட்டு போட்டுவிட்டு வருபவர்களும் ஒன்னு..தங்களால்தான் வெற்றி என்ற மனப்பான்மையோடு இருப்பார்கள் !

@ameerfaj

கணவன் 'செந்திலாகவும்'

மனைவி 'கவுண்டமணியாகவும்'

இருந்தா வாழ்க்கை கமெர்ஷியல் படம்‌ மாதிரி 'ஹிட்' ஆகும் ‌.

@sethura51300832

நிம்மதியாக வாழ்வதற்கு..சேமிப்பு இருக்கணும்னு அவசியம் இல்லை...கடன் இல்லாமல் இருந்தாலே போதுமானது...!!!

@Thaadikkaran

இரு உறவுகளுகிடையே சண்டையான பின்தான், ஒவ்வொருவரின் அசைவுகளையும் முன்னைவிட அதிகமாய் கண்காணிப்பார்கள் போலும்..!!

@manipmp

என் மீதான உந்தன் கருணை

சென்னைக்கு மிக அருகாமையில் உள்ளது

@udaya_Jisnu

"யாருகிட்டயும் சொல்லிடாத" என்பது,

ரகசியத்தின் கல்லறை வாக்கியம்...

@viji_twtzz

காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி

இந்த ரிக்கா டான்ஸ்

லலிதாவின் பாட்டுக்கு பாட்டு

@Ramesh46025635

நான் மும்பையை பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை - பிரதமர் மோடி.

"ஒன்லி வெளிநாட்டு லொக்கேசன் மட்டும் தான் டார்கெட்டா ஜீ???"

@withkaran

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருக்கு..அதை எதிர்த்து போராட வேண்டிய இளைஞர் கூட்டம் விஸ்வாசம் தியேட்டர் முன்னாடி செல்போன்ல லைட் அடிச்சு விளையாடிட்டு இருக்கு..அதை புரிய வைக்க வேண்டிய தலைமுறை பேட்டல தலைவான்னு கத்திட்டு இருக்கு..ச்சை

@ajmalnks

மோடி ஆட்சியில் தனி நபர் வருமான‌ம் 45% அதிகரிப்பு - செய்தி

பக்கோடா விற்று கோடிஸ்வரனான பட்டதாரிகள் பலபேர்ன்னு சேர்த்து சொல்லுங்க

@manivannan7402

தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன - பிரதமர் மோடி

திறப்பு விழா வைக்காமல் திறந்திருக்கும் "முதல் கதவு" இதுதான்னு சொல்லுங்க!

@asachanakkiyan

சின்னையா காது குத்துற நிகழ்ச்சிக்கு போயிருக்காரு அதனால இட ஒதுக்கீடு தீர்மானத்தை தடுத்து நிறுத்திட முடியலை இது ஒரு குத்தமா...

@Annaiinpillai

வெளிநாட்டுலையே காலத்த கழிச்சிட்டு உள் நாட்டுக்கா வந்தா கனவா தெரியுரது தான் ஜி யோட டிஜிட்டல் டிசைன்!

@Mark2kali

70 வருசமா கொஞ்சம் கொஞ்சமா போராட பெற்ற சமூகநீதியை வெறும் 48 மணி நேரத்துல உடைச்சு காலி பன்னிட்டானுக. இன்னமும் நாம பேட்டைக்கு போலாமா விஸ்வாசம் போலாமான்னு பேசிட்ருக்கோம்.

-லாக் ஆஃப்

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon