மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

ஜிஎஸ்டி: வரி விலக்கு வரம்பு உயர்வு!

ஜிஎஸ்டி: வரி விலக்கு வரம்பு உயர்வு!

சிறு நிறுவனங்களுக்கான வரி விலக்கு வரம்பை ஜிஎஸ்டி கவுன்சில் ரூ.40 லட்சமாக உயர்த்தியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 32ஆவது கூட்டம் இன்று (ஜனவரி 10) டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பை ரூ.40 லட்சமாக உயர்த்துவதாக ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவரும், ஒன்றிய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஜிஎஸ்டியில் வரி விலக்கு வரம்பு கலவை முறையில் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. எஞ்சிய பகுதிகள் முழுவதும் ரூ.20 லட்சமாக உள்ள வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது” என்றார்.

மேலும், கலவைத் திட்டத்தில் இணைந்து பயன்பெறும் நிறுவனங்களுக்கான ஆண்டு விற்றுமுதல் வரம்பும் ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி துறைகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் அமைச்சர்களிடம் நிலவியதால் அதுகுறித்து முடிவெடுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அருண் ஜேட்லி கூறினார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon