மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ரூ.1,000 வழங்கக் கட்டுப்பாடு: அரசு மேல் முறையீடு!

ரூ.1,000 வழங்கக் கட்டுப்பாடு: அரசு மேல் முறையீடு!

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிராகத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 10) மேல்முறையீடு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இன்று காலை அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மேல்முறையீடு செய்தார். அதில், ”பல பேர் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டார்கள் என்றும் எனவே நேற்று பிறப்பித்த உத்தரவால் இன்னும் பல பேர் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று மதியம் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் மனோகரன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்க அனுமதிக்க வேண்டும். நேற்று தடை விதித்த உத்தரவு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon