மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

விவசாயம் என்பது அவமானம் அல்ல.. அடையாளம்!

 விவசாயம் என்பது அவமானம் அல்ல.. அடையாளம்!

விளம்பரம்

இந்த வாசகத்தைவிட எளிமையாக விவசாயத்தின் மேன்மையை வெளிப்படுத்திவிட முடியாது. இந்த வாசகத்தையே கொள்கையாக வைத்து ஒரு கூட்டமைப்பு செயல்படுகிறதென்றால், அதன் செயல்பாடுகளை பற்றி விவரிக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழர் திருநாள் நெருங்கி வரும் வேளையில், அதனைக் கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது வருத்தமான செய்திதான். வருடா வரும் மழை வருகிறதோ இல்லையோ, இயற்கை பேரிடர் தவறாமல் வந்துவிடுகிறது. வகை வகையான பெயர்களில் புயல்கள், வழங்கப்படாத நீரால் வறட்சி, வேண்டாத நேரத்தில் வழங்கப்படும் நீரால் வெள்ளம் என்று எண்ணிலடங்கா இன்னல்கள் ஏற்பட்டு விவசாயத்தை வீழ்த்திவிடுகிறது. விவசாயிகள் வீழ்ந்துவிடுகிறார்கள்.

இவ்வாறு வீழ்ந்துவிடும் விவசாயிகளுக்கு வாழ்வுதர மனம் உள்ள மனிதக்கூட்டங்கள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன. அப்படியானதுதான், “தமிழ்நாடு விவசாயிகள் தோட்டக்கலை அபிவிருத்திக் கூட்டமைப்பு”. (Tamilnadu Farmers Horticulture Development Federation - TNFHDF)

அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளை, இந்த அரசு சாரா அமைப்பு செய்துகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு ஊழிக்காலம் இது. இந்த ஊழிக்காலத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர, நாம் கை கொடுக்கவேண்டும்.

“மக்களின் நலனுக்காக இயற்கை விவசாயத்தின் நலன் காக்கவேண்டும். மேலும் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை விவசாயம் நோக்கித் திருப்பவேண்டும்.” என்பதே இந்த கூட்டமைப்பின் நோக்கம்.

இதுப்போன்ற தனியார் அமைப்புகள் பல இருந்தாலும், கொள்கை ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் தனித்து நிற்கிறது தமிழ்நாடு விவசாயிகள் தோட்டக்கலை அபிவிருத்திக் கூட்டமைப்பு. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தாலூக்காவிலும் ஒரு அதிகாரி, தகுந்த தகவல்களுடன் கூடிய இணையதளம், விலையில்லா தொலைத் தொடர்பு எண் என்று ஒரு முறைசாரா அரசு இயந்திரமாகவே விவசாயிகளுக்காக செயல்பட்டு வருகிறது இந்த கூட்டமைப்பு.

விவசாயிகளின் உற்றத் தோழனாக இருக்கும் இந்த கூட்டமைப்பின் செயல்பாடுகள் பற்றி வரும் நாட்களில் விரிவாக காண்போம்.

தொடர்புக்கு : 1800 212 2018 (Toll free number)

இணையதள முகவரி:

விளம்பர பகுதி

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon