மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 10 ஆக 2020

பாலியல் புகார்: பானுபிரியா ரியாக்‌ஷன்!

பாலியல் புகார்: பானுபிரியா ரியாக்‌ஷன்!

நடிகை பானுபிரியாவின் வீட்டில் பணிபுரியும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, அச்சிறுமியின் தாய் பத்மாவதி என்பவர் ஆந்திராவில் கொடுத்த புகாரின் பேரில், பானுபிரியா மீதும் அவரின் அண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆந்திராவிலிருந்து பானுபிரியா வீட்டில் பணிபுரிவதற்காக தனது மகளை அனுப்பிவைத்திருக்கிறார் பத்மாவதி. மாதம், பத்தாயிரம் ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்படும் என்ற உறுதியுடன் வேலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட என் மகளுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும், பானுபிரியாவின் அண்ணன் என் மகளை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாக ஒரு மர்ம நபரிடமிருந்து ஃபோன் கால் வந்து நான் அங்கு சென்று பார்த்தபோது என் மகளை சந்திக்கவே விடவில்லை என்றும் காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறார் பத்மாவதி.

இந்தப் புகார் தொடர்பாக பானுபிரியா பேசியபோது “பத்மாவதியின் மகள் எங்கள் வீட்டிலிருந்து பல பொருட்களைத் திருடியிருக்கிறார். இதைக்கண்டுபிடித்து நாங்கள் பொருட்களையும் பணத்தையும் திரும்ப கேட்டோம். பொருட்களைத் திரும்ப கொடுத்தவர் பணத்தைக் கொடுக்கவில்லை. பணம் வரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வோம் என்று சொன்னதும், பணத்தைத் தயார் செய்து கொண்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் ஆந்திராவில் புகார் கொடுத்திருக்கிறார். எங்கள் பொருளை திருட்டுக் கொடுத்துவிட்டு இப்போது இந்த பழியையும் சுமந்து செல்கிறோம். அவரது மகள் என் வீட்டில் தான் இப்போது வரையிலும் இருக்கிறார்” என்று பானுபிரியா கூறினார்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon