மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 5 டிச 2020

காலவரம்பை நீட்டிக்க வாய்ப்பில்லை: ட்ராய்!

காலவரம்பை நீட்டிக்க வாய்ப்பில்லை: ட்ராய்!

கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்வு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று ட்ராய் தெரிவித்துள்ளது.

கட்டண அடிப்படையில் தொலைக்காட்சி சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி முதல் எல்லா சேனல்களுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என அண்மையில் ட்ராய் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 100 இலவச சேனல்கள் ரூ.153 கட்டணத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் 25 சேனல்கள் தூர்தர்ஷன் சேனல்கள், 50 சேனல்கள் இலவச சேனல்கள். பிராந்திய மொழிக்கேற்ப அவை வழங்கப்படும். மீதமுள்ள 25 சேனல்கள் கட்டண சேனல்களாகும். ட்ராயின் இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுஒருபுறமிருக்க, ஒரு எச்.டி சேனலை தேர்வு செய்தால் அது இரண்டு இலவச சேனல்களுக்கு நிகராக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று ட்ராயின் அறிவிப்பு கூறுகிறது. இந்த இலவச சேனல்களுக்கு மேல் கூடுதல் சேனல்களை பெற விரும்புவோர், அவற்றுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை கட்டணத்துடன் இணைத்து செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், டி.டி.எச் சேவைகளுக்கு இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக கேபிள் சேவை எனக்கூறி எந்தத் தொகையும் வசூலிக்கப்படக்கூடாது எனவும் ட்ராய் தெரிவித்துள்ளது. கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்வு செய்வதற்கான கால வரம்பை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க வேண்டும் என பலதரப்புகளில் கோரிக்கை எழுந்தது. எனினும், கால வரம்பை நீட்டிக்க வாய்ப்பே இல்லை என்று ட்ராய் உறுதிபட தெரிவித்துள்ளது.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon