மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 10 ஆக 2020

சிவகார்த்தி படத்துக்கு நடிகர்கள் தேவை!

சிவகார்த்தி படத்துக்கு நடிகர்கள் தேவை!

சிவகார்த்திகேயனின் 15ஆவது திரைப்படத்தை, இரும்புத்திரை படத்தின் இயக்குநர் மித்ரன் இயக்குகிறார். இரும்புத்திரையில் வில்லனாக மிரட்டிய அர்ஜூனும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கிறார். இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க ஆறு முதல் எட்டு வயதுக்குட்பட்ட சிறுவன் தேவை என, இப்படத்தைத் தயாரிக்கும் 24ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டஸ்கி நிறத்துடன் கூடிய 6-8 வயதுடைய சிறுவன்

7-16 வயதுடைய ஆண் மற்றும் பெண்

17-21 வயதுடைய ஆண் மற்றும் பெண்

மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் [email protected] என்ற மெயில் ஐடிக்கு அவர்களைப் பற்றிய தகவல்களை அனுப்புமாறு கேட்டிருக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தில் ரூபன் எடிட்டராக பணிபுரிகிறார்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon