மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

யாகம்: பன்னீர்செல்வத்துக்கு எதிராக மனு!

யாகம்: பன்னீர்செல்வத்துக்கு எதிராக மனு!

துணை முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை 3.30 மணி முதல் காலை 8.30 மணி வரை யாகம் நடத்தப்பட்டதாகவும், அதில் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டோம் என்று பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

யாகம் வளர்த்தது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவருமான ஆனூர் ஜெகதீசன் சார்பில், இன்று (ஜனவரி 25) அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “தலைமை செயலகத்தில் உள்ள தன் அலுவலகத்திலேயே துணை முதல்வர் பன்னீர்செல்வம் சிறிய கோயில் கட்டியுள்ளது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. யாகம் நடத்த அனுமதி வழங்கிய தலைமை செயலாளர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். பொது இடங்களில் அனுமதி பெறாமல் உள்ள வழிப்பாட்டு தலங்களை அகற்ற வேண்டும் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon