மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

குரங்கணி வனப்பகுதியில் தடை!

குரங்கணி வனப்பகுதியில் தடை!

தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றத்துக்குத் தடை விதித்துள்ளது தமிழக வனத் துறை.

கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதியன்று, தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. அங்கு தனியார் நிறுவனம் சார்பில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மூன்று மாதங்களுக்குக் குரங்கணியில் மலையேற்றத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அங்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதம் தமிழக வனத் துறைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதன்படி, குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றம் செய்யக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது தகுந்த பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்தபிறகே, அங்கு மலையேற்றம் செய்வதற்கான அனுமதியை வழங்கி வந்தனர் தமிழக வனத் துறையினர்.

கடந்த இரண்டு நாட்களாக பெரியகுளம், லட்சுமிபுரம் வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இது மேல்நோக்கி குரங்கணி நோக்கிப் பரவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கணியில் மலையேற்றத்துக்குத் தடை விதித்துள்ளது தமிழக வனத் துறை.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon