மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

இரண்டே நிமிடத்தில் இந்தியாவை நடவடிக்கை எடுக்கவைத்தேன்!

இரண்டே நிமிடத்தில் இந்தியாவை நடவடிக்கை எடுக்கவைத்தேன்!

இரண்டே நிமிடம் பேசி இந்தியாவை அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியைக் குறைக்கவைத்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை இந்தியா பாதியாகக் குறைத்தது ஒரு நல்ல டீல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்க விஸ்கிகளுக்கு இந்தியா அதிக அளவில் வரி விதிப்பது குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வர்த்தக நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், “மோட்டார் சைக்கிள்களை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் அமெரிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுவந்தது. இந்தியாவிடம் இரண்டே நிமிடம் பேசி வரியை 50 விழுக்காடாகக் குறைக்கவைத்தேன்.

இப்போது இந்தியாவில் அமெரிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு 2.4 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. எனினும், இந்தியாவுக்குள் இறக்குமதியாகும் ஒயின்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிக வரி உள்ளது. அவர்கள் அதிகளவிலான வரியை வசூலிக்கின்றனர். எடுத்துக்காட்டாக விஸ்கிக்கு 150 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. நாம் எதையுமே வசூலிப்பதில்லை.

பல நாடுகளும் நம்மை சாமர்த்தியம் இல்லாதவர்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இதைத்தான் செய்துவருகின்றனர். அவர்கள் இதை நிறுத்த வேண்டும். அவர்களில் பலர் நமது நண்பர்களாகவும், கூட்டணி நாடுகளாகவும் உள்ளனர். சில சமயங்களில், கூட்டணியில் இல்லாதவர்களைக் காட்டிலும் கூட்டணியில் இருப்பவர்கள் நம்மைத் தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர்” என்று கூறினார்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon