மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

நானோவை கைவிடும் டாடா!

நானோவை கைவிடும் டாடா!

நானோ கார் உற்பத்தியையும், விற்பனையையும் நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பி.எஸ்-6 தரநிலைகளுக்கு ஏற்ப டாடா நானோவை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்ய வாய்ப்பில்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், நானோ காரின் உற்பத்தியையும், விற்பனையையும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் டாடா நிறுவனம் நிறுத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவின் தலைவரான மாயாங் பிரதீக் பேசுகையில், பி.எஸ்-6 தரநிலைகள் அமலுக்கு வந்தபிறகு நானோவுடன் மற்ற சில வாகனங்களின் உற்பத்தியும் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். எனினும், எந்தெந்த வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

உலகின் மிக விலை குறைவான காரை உருவாக்குவதற்காக முயற்சித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2008ஆம் ஆண்டில் நானோ காரை அறிமுகப்படுத்தியது. அப்போது நானோ காருக்கு ரூ.1 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் கார் வாங்க விரும்பும் குடும்பங்களை குறிவைத்து இந்த கார் அறிமுகமானது. கடந்த ஜூன் மாதத்தில் டாடா நிறுவனம் வெறும் நான்கு நானோ கார்களை மட்டுமே உற்பத்தி செய்தது. தற்போது முழுமையாக நானோ கார் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளது. கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 60 விழுக்காடு பங்குள்ளது. 2021-22ஆம் ஆண்டில் புதிய கார்களை அறிமுகப்படுத்தி 90 விழுக்காடு பங்கை கைப்பற்ற டாடா திட்டமிட்டுள்ளது.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon