மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

யார் மீது தவறு?

வகுப்பில் யாருமே இல்லை. அருண் மட்டும் தனியாக உட்கார்ந்திருக்கிறான். விளையாட்டுப் பிரிவு என்பதால் மற்றவர்கள் அனைவரும் விளையாடச் சென்றுவிட்டனர். அப்போது, வகுப்பில் இருந்த அருண் தனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவனின் பையை நோண்ட ஆரம்பித்தான். தன்னிடம் இல்லாத பொருட்கள் அனைத்தும் அவனிடமிருந்ததால், இவனுக்கு அதன்மீது ஆசை ஏற்பட்டது. அதிலிருந்த, பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டான். வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் தன் திருடிக் கொண்டுவந்த பொருட்களை எடுத்துக் காட்டினான்.

அவன் அம்மா, அதைப் பெரிதாகக் கண்டிக்காமல் விட்டுவிட்டார். இதனால், அருண் தினமும் பள்ளியிலிருந்து ஏதாவது ஒரு பொருளை திருட ஆரம்பித்தான். கடைசியில், ஒரு திருடனாகவே மாறிவிட்டான். அருண் திருடனாக மாறியதற்கு அவனைக் காட்டிலும் அவன் அம்மாவே காரணம் அல்லவா?

பைபிளில் நீதிமொழிகள் புத்தகத்தில், “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான், அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்” எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே சின்னத் தவறு செய்யும்போது, பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்திவிட்டால், அவர்கள் நல்ல குடிமக்களாக வளர வாய்ப்பிருக்கிறது.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே

அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்

*அன்னை வளர்ப்பினிலே”

என்ற பாடலைப் பலமுறை கேட்டிருப்போம். குழந்தைப் பருவத்தில் என்ன விதமான விதைகளைப் போடுகிறமோ, அந்த விதைகளுக்கேற்ற கனிகள்தான் அந்தக் குழந்தையின் வாழ்வில் கிடைக்கும். அந்தக் கனியின் தன்மையைத் தீர்மானிப்பது நாம் வளர்க்கும் முறைதான்.

- சா.வினிதா

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon