மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

சிறந்த விருது பெற்ற தமிழகம்!

சிறந்த விருது பெற்ற தமிழகம்!

தமிழ்நாட்டுக்குச் சிறந்த மாநிலத்துக்கான விருது கிடைத்ததைப் பெருமிதமாக நினைப்பதாகத் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் ‘சரிவிகிதம் நிறைந்த, பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவை உண்டு நலமுடன் வாழ்வோம்’ என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில், அக்டோபர் 16 முதல் நான்கு மாதங்களுக்குத் தொடர் மிதிவண்டிப் பயணம் நடைபெற்றது. இது நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து நேற்று (ஜனவரி 29) டெல்லியில் இந்திய அளவிலான ஆரோக்கிய பாரத பயண நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டுக்குச் சிறந்த மாநிலத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே, தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார். அதுபோன்று மதுரை, சிவகாசி மாவட்டங்கள் சிறந்த மாவட்டங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019