மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

போலீஸ் செயலி: ரூ.3.55 லட்சம் அபராதம் வசூல்!

போலீஸ் செயலி: ரூ.3.55 லட்சம் அபராதம் வசூல்!

கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போலீஸ்-இ-ஐ(Police-E-EYE) என்ற செயலி மூலம் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை 3.55 லட்சம் ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது என மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொலை வழக்குகளில் நிலுவையில் உள்ளவற்றை விசாரித்து குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விரைவில் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டுக் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

“தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஒட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோரைப் படம்பிடித்துப் பொதுமக்களே புகார் தெரிவிக்கும் வகையில் போலீஸ்-இ-ஐ என்ற செயலி ஜனவரி 7ஆம் தேதியன்று பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் செயலியை இதுவரை 5,600 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் சாலை விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக 855 புகைப்படங்களுடன் புகார்கள் வந்துள்ளன” என்று கூறினார். இந்தப் புகார்களின்படி விதிமீறல்களில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.3.55 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon