மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

இந்தியாவில் முதலீட்டைக் குவிக்கும் வேதாந்தா!

இந்தியாவில் முதலீட்டைக் குவிக்கும் வேதாந்தா!

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.60,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வேதாந்தா குழுமம் இதுவரையில் இந்தியாவில் கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் துறையில் ரூ.2.34 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்டு ரூ.60,000 கோடி முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. சுரங்கங்கள் மற்றும் இயற்கை வளங்கள் துறையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனமானது இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்டது. இந்நிறுவனத்தின் நிறுவனரான அனில் அகர்வால் மும்பையைச் சேர்ந்தவர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்நிறுவனத்துக்குச் சொந்தமானது.

ஏற்கெனவே இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடும் எதிர்ப்பு நிலவிவரும் நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் ரூ.60,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாகத் தற்போது அறிவித்துள்ளது. மேலும், தென்னாப்பிரிக்காவில் ரூ.8,500 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தென்னாப்பிரிக்காவின் தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படுமென்று தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019