மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

கத்தாரில் கைதான தமிழக மீனவர்கள் வீடு திரும்பினர்!

கத்தாரில் கைதான தமிழக மீனவர்கள் வீடு திரும்பினர்!

கத்தாரில் கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களும் வீடு திரும்பியுள்ளனர்.

ஜனவரி 13ஆம் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை கத்தார் நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் நேற்று (ஜனவரி 29) விடுவிக்கப்பட்டனர். இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தின் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த சி.சுதர்சன் (37), திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியை சேர்ந்த ஏ.சுபாஷ் (29), இடிந்தகரையை சேர்ந்த எஸ்.சாந்தாக்ரூஸ் (36), தூத்துக்குடி மாவட்டம் பேரியதலையை சேர்ந்த ஜி.பிரதாப் (38), சுதர்சன் (51) ஆகிய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெற்காசிய மீனவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக சர்ச்சில் பேசுகையில், “ஈரானில் பணிபுரிந்து வந்த மீனவர்கள் ஜனவரி 13ஆம் தேதியன்று கடல் எல்லை தாண்டி நுழைந்ததால் கத்தார் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் இந்திய அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தலையிட்ட பிறகு கத்தார் சிறையிலிருந்து ஐந்து மீனவர்களும் ஜனவரி 28 அன்று விடுவிக்கப்பட்டனர். கத்தார் தலைநகர் தோகாவிலிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஐந்து மீனவர்களும் கத்தாரிலிருந்து டெல்லி விமான நிலையத்துக்கு நேற்று (ஜனவரி 29) அழைத்து வரப்பட்டனர். பின்னர் டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு 8.30 மணிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் மீன்வளத் துறை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டனர். திருவனந்தபுரத்திலிருந்து சாலை வழியாக ஐந்து மீனவர்களும் வீடு திரும்பினர்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon