மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

வங்கிக் கொள்ளை: காவலர் பணியிட மாற்றம்!

வங்கிக் கொள்ளை: காவலர் பணியிட மாற்றம்!

திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை நடைபெற்ற அன்று ரோந்து பணிக்குச் செல்லாத காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. நேற்று முன்தினம் (ஜனவரி 28) வங்கியின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு 39, 114, 223, 229, 300 ஆகிய 5 லாக்கர்களை உடைத்து அதிலிருந்த 500 சவரன் நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர் கொள்ளையர்கள். வங்கி மேலாளர் அறையில் இருந்த ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரிக்க 60 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக நகை மற்றும் பணம் இருந்த 5 லாக்கர்களில் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால், வங்கி மேலாளருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கொள்ளை நடந்த அன்று, கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் காவல் நிலைய எழுத்தர் சகாயராஜ் ரோந்து பணிக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் செல்லவில்லை. அதனால், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் உத்தரவிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டிலிருந்தே அந்த வங்கியில் இரவு காவலர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், ரோந்து பணிக்குச் செல்லாதது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon