மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

விஷ்ணுவின் ‘10 இயர்ஸ் சேலஞ்ச்’!

விஷ்ணுவின் ‘10 இயர்ஸ் சேலஞ்ச்’!

பிரபு சாலமோன் இயக்கத்தில் உருவாகும் ‘காடன்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சியில் நடித்த போது நடிகர் விஷ்ணு விஷாலுக்கு முதுகெலும்பு, கழுத்துப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் ரானா டகுபதி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யானைக்கும் ஒரு மனிதனுக்குமான உறவைப் பற்றி கூறுவதாக இப்படம் உருவாகி வருகிறது. காயம் காரணமாக நான்கு வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் பத்து ஆண்டுகள் நிறைவடைந்தது பற்றி மற்றொரு பதிவிட்டுள்ளார். “10 ஆண்டுகளுக்கு முன் ஒரு நடிகனாக உங்களைச் சந்தித்தேன். சிலர் நான் நிலைக்க மாட்டேன் என்றனர். சிலர் நான் ஹீரோ மெட்டீரியல் இல்லை என்றனர். எனது திரைப்படம் மற்றும் பார்வையாளர்கள் மீதுள்ள நம்பிக்கையில் இதுவரை வெற்றிகரமாகப் பயணித்து வருகிறேன்.

எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி திரைத்துறைக்கு வந்து நிறைய விஷயங்களைக் கஷ்டப்பட்டு தெரிந்து கொண்டேன். இன்றும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது தான் எனது திரைப்பயணம் தொடங்கியதாகக் கருதுகிறேன். வருங்காலத்தில் பல நல்ல தரமான திரைப்படங்களைக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. 10 ஆண்டுகளில் இதுவரை நான் சொல்லிடாத வார்த்தை.. ரசிகர்களுக்கு நன்றி.

6 வருடங்களாகத் திரைத்துறையில் சேர வாய்ப்புத்தேடி அலைந்து, வாய்ப்பு கிடைத்து 10 ஆண்டுகள் இந்தத்துறையில் இருப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒவ்வொரு முறை வெள்ளித்திரையில் என்னைப் பார்க்கும் போது எனது தந்தை முகத்தில் வரும் சிரிப்பு என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது”என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019