மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

பன்றி காய்ச்சலால் 169 பேர் மரணம்!

பன்றி காய்ச்சலால் 169 பேர் மரணம்!

இந்த ஆண்டில் இதுவரையில் 4,571 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 169 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் பன்றி காய்ச்சல் காரணமான இறப்பு எண்ணிக்கை 169ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் 4,571 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 40 விழுக்காட்டினர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 28 வரையில் அம்மாநிலத்தில் 1,911 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 75 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் 600 பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 532 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் இறக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் 174 பேர் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்துள்ளனர். ஹரியானாவில் 372 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 82 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் இறந்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 14,992 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,103 பேர் உயிரிழந்திருந்தனர்.

பன்றிக் காய்ச்சலை கண்டறியும் கருவிகள், மருந்துகள் மற்றும் மாஸ்க்குகள் போதிய அளவில் இருப்பு இருப்பதாகவும் மக்களுக்கு இதுகுறித்த ஆலோசனைகளை மாநில அரசுகள் வழங்க வேண்டுமெனவும் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon