10 நிமிட தாமதம்: தலாக் கூறிய கணவர்!

உத்தரப் பிரதேசத்தில் தாய் வீட்டுக்குச் சென்று வீடு திரும்பிய மனைவி 10 நிமிடம் தாமதமாக வந்த காரணத்துக்காக, அவரது கணவர் தலாக் கூறி விவகாரத்து செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் பாட்டியைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். உடல்நலமில்லாத அவரைப் பார்த்துவிட்டு வருவதற்குச் சில மணி நேர அவகாசமே அளித்திருக்கிறார் அவரது கணவர். இந்த நிலையில், திடீரென்று அரை மணி நேரத்தில் வீடு திரும்ப வேண்டுமென்று அந்த பெண்ணின் கணவர் கூறியிருக்கிறார். ஆனால், அந்த பெண்ணோ 10 நிமிடம் தாமதமாக வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தன் மனைவியின் சகோதரருக்கு போன் செய்த அந்த நபர் மூன்று முறை தலாக் கூறியிருக்கிறார். இதனை நேரில் கண்ட அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இது பற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அலிகஞ்ச் காவல் துறை அதிகாரி அஜய் படௌரியா இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.