மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

நியூசி. அணியைப் பதம் பார்த்த இந்திய வீராங்கனைகள்!

நியூசி. அணியைப் பதம் பார்த்த இந்திய வீராங்கனைகள்!

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தொடரை வென்ற நிலையில் பெண்கள் அணியும் தொடரை வென்று அசத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒவ்வொரு அணிகளும் மற்ற நாடுகளில் சென்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். அதன்படி தற்போது இந்திய பெண்கள் அணி நியூசிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுவருகிறது.

முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஜெர்மையா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாகக் களம் இறங்கினார்கள். ரோட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா 8 ரன்னில் வெளியேற மந்தனாவுடன் கேப்டன் மிதாலி ராஜ் கூட்டணி அமைத்தார். மந்தனா அதிரடியில் இறங்க மிதாலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 83 பந்துகளை எதிர்கொண்ட மந்தனா 13 பவுண்டர்கள் ஒரு சிக்ஸர் என 90 ரன்களை குவித்தார். மிதாலி ராஜ் 111 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்தார். 36ஆவது ஓவரில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கைத் தொட்டது. மந்தனா சிறந்த ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு போட்டிகளை வென்றுள்ளதுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

வெற்றி குறித்து பேசிய மிதாலி ராஜ், “கண்டிப்பாகத் தொடரை 3- 0 என்ற கணக்கில் வெல்ல முயல்வோம். இருப்பினும் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019