மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…நேற்றைய புதிருக்கான விடை!

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…நேற்றைய புதிருக்கான விடை!

நேற்றைய புதிர் இதுதான்:

பாபு பொய் சொல்வதாக கண்ணன் கூறுகிறார். முத்து பொய் சொல்வதாக பாபு சொல்கிறார். பாபு மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் பொய் சொல்வதாக முத்து கூறுகிறார். மூன்று பேரும் எப்போதும் உண்மை பேசுவார்கள் என்றோ அல்லது எப்போதும் பொய் பேசுவார்கள் என்றோ வைத்துக்கொண்டால், யார் உண்மை பேசுவார்கள்?

மூன்று கூற்றுகளையும் கவனமாகப் பாருங்கள்:

1. பாபு பொய் சொல்வதாக கண்ணன் கூறுகிறார்.

2. முத்து பொய் சொல்வதாக பாபு சொல்கிறார்.

3. பாபு, கண்ணன் ஆகிய இருவரும் பொய் சொல்வதாக முத்து கூறுகிறார்.

மூன்று பேரும் எப்போதும் உண்மை பேசுவார்கள் என்றோ அல்லது எப்போதும் பொய் பேசுவார்கள் என்றோ வைத்துக்கொள்லலாம் அல்லவா?

முதலில் கண்ணன் சொல்வது உண்மை என வைத்துக்கொள்வோம். அப்படியானால் முதல் கூற்றின்படி பாபு சொல்வது பொய் என்பது உண்மை. அதாவது பாபு பொய் சொல்கிறார்.

இரண்டாம் கூற்றின்படி முத்து பொய் சொல்வதாக பாபு சொல்கிறார். முதல் கூற்றின்படி பொய் சொல்லும் பாபு சொல்வது உண்மையாக இருக்க முடியாது. எனவே முத்து சொல்வது உண்மை.

மூன்றாம் கூற்றின்படி பாபு, கண்ணன் இருவரும் பொய் சொல்வதாக முத்து சொல்கிறார். இரண்டாம் கூற்றின்படி முத்து உண்மை சொல்பவர். அப்படியானால், பாபு, கண்ணன் இருவரும் பொய்யர்கள்.

இருவரும் பொய்யர்கள் என்றால் முதல் கூற்றின்படி கண்ணன் சொன்னது உண்மை அல்ல. எனவே இந்த பதில் அடிபட்டுப்போகிறது.

எனவே முதல் கூற்றின் அனுமானத்தை மாற்றிப்பார்ப்போம்.

கண்ணன் சொல்வது பொய் என வைத்துக்கொள்வோம். பாபு சொல்வது பொய் என்கிறார் கண்ணன். அப்படியானால் பாபு சொல்வது உண்மை.

இரண்டாம் கூற்றைப் பாருங்கள். முத்து பொய் சொல்வதாக பாபு சொல்கிறார். பாபு உண்மை விளம்பி என முதல் கூற்றின்படி கண்டோம். எனவே முத்து பொய்யர்.

மூன்றாம் கூற்றைப் பாருங்கள்.

பாபு, கண்ணன் ஆகிய இருவரும் பொய் சொல்வதாக முத்து கூறுகிறார். பாபு உண்மை பேசுபவர் என்பதால் முத்து கூறுவது உண்மை அல்ல. எனவே முத்துவும் பொய் பேசுபவர்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019