ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா?

ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.
டிரான்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்த பட்டியலைத் தயார் செய்து வெளியிடுகிறது. அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான பட்டியல் விவரங்களை அவ்வமைப்பு நேற்று (ஜனவரி 29) வெளியிட்டது. இதில், நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. சோமாலியா, சிரியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட 3 புள்ளிகள் அதிகரித்து 78ஆம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. சீனா 87ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 117ஆவது இடத்திலும் உள்ளன.
2014ஆம் ஆண்டு 85ஆவது இடத்திலிருந்த இந்தியா 2015ஆம் ஆண்டு 76ஆவது இடத்துக்கு வந்தது. 2017ஆம் ஆண்டில் 81ஆவது இடத்தை பிடித்தது.