மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

மக்களவைத் தேர்தல்: முந்தும் அதிமுக!

மக்களவைத் தேர்தல்: முந்தும் அதிமுக!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் பிப்ரவரி 4 முதல் 10ஆம் தேதி வரை அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சார ஒருங்கிணைப்புக்காக குழுக்கள் அமைத்துள்ளன. பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்று ஒருபக்கம் தகவல் வெளியாகிக் கொண்டிருந்தாலும், அதிமுக தரப்பிலிருந்து இதுவரை மவுனம் மட்டுமே பதிலாக வந்துகொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தம்பிதுரை மட்டும் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளையும் முந்திக் கொண்டு தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறும் தேதியினை அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஜனவரி 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019