மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

வரிக்குறைப்பு: எதிர்பார்ப்பில் ரத்தினங்கள் துறை!

வரிக்குறைப்பு: எதிர்பார்ப்பில் ரத்தினங்கள் துறை!

தங்கம் மற்றும் வைரம் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு நகைகள் மற்றும் ரத்தினங்கள் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய நகைகள் மற்றும் ரத்தினங்கள் துறையின் தலைவர் அனந்த பத்மநாபன் ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தங்கம் இறக்குமதிக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை வரும் பட்ஜெட்டில் 4 விழுக்காடாகக் குறைக்க வேண்டும். மேலும், வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களுக்கான இறக்குமதி வரி மற்றும் ரத்தினக் கற்களுக்கான இறக்குமதி வரியை 2.5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மூலதன தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ளும் விதமாகக் கடன் விதிகளைத் தளர்த்த வேண்டும் எனவும், பான் கார்டு வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாட்டின் மக்கள்தொகையில் 50 விழுக்காட்டினர்கூட பான் கார்டு வைத்திருக்கவில்லை. ஆனால் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகைகள் வாங்க பான் கார்டு கட்டாயம் என்ற விதிமுறை கிராமப்புற வாடிக்கையாளர்களை மிகக் கடுமையாகப் பாதிக்கிறது” என்றார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019