மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

கொலைகார ஆட்சி: சேலத்தில் ஸ்டாலின்

கொலைகார  ஆட்சி: சேலத்தில் ஸ்டாலின்

தமிழகத்தில் கொலைகார ஆட்சி நடப்பதாக முதல்வர் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகமெங்கும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. தருமபுரியில் நேற்று நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இன்று காலை முதல்வர் மாவட்டம் சேலத்தில் ஓமலூர் ஒன்றியம் பாகல்பட்டி ஊராட்சியில் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின், “நாட்டிலேயே கிராமசபை கூட்டத்தை நடத்திய பெருமை திமுகவுக்குத் தான் உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் சென்றால் யாராவது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்வார்களா, அப்படிச் சொன்னாலும் கொலைகார முதல்வர் என்றுதான் சொல்வார்கள் என விமர்சித்தார். கொடநாடு கொலைக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறார், அவர் 5 கொலை செய்திருக்கிறார் என்று நீதிமன்றம் சொல்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கோரிக்கைகள் கேட்கப்பட்டன.

இதையடுத்து, பேசிய ஸ்டாலின், ஊராட்சி சபை கூட்டங்களிலேயே, சேலத்தில் தான் அதிக கோரிக்கைகள் பெறப்பட்டன. திமுக ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் கலைஞர், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இடஒதுக்கீட்டில் பல சலுகைகளை பெற்றுத் தந்தார். விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் கலைஞர் ஆட்சியில் ஆதரவாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார் ஸ்டாலின். இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழு அனாதை போல் உள்ளதாகவும் வேதனைத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019