மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

காங்கிரஸ் பிரமுகர் மீது போக்சோ பதிவு!

காங்கிரஸ் பிரமுகர் மீது போக்சோ பதிவு!

17 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மீது போக்சோ சட்டம் பதியப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்ட காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர் ஜி.எம்.ஜார்ஜ். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவர் வீட்டில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி கடந்த வாரம் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் எதற்காக தற்கொலைக்கு முயற்சித்தார் என்று அவர் உடனடியாக சொல்லவில்லை.

அமைதியான நிலைக்கு சிறுமியை கொண்டுவந்த பிறகு அவரது பெற்றோர், எதற்காக தற்கொலை செய்ய முயற்சித்தாய் என்று கேட்டுள்ளனர். அப்போது, ஜி.எம்.ஜார்ஜ் 2 ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அச்சிறுமி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் பெற்றோர் ஜார்ஜ் மீது வழக்கு தொடர முயற்சித்துள்ளனர். ஆனால் தொடக்கத்தில் ஜார்ஜ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை விசாரிக்கவோ அல்லது கைது செய்யவோ காவல்துறை உரிய முக்கியத்துவம் அளிக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அச்சிறுமியின் தந்தை செய்தியாளர்களின் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து மனோரமா நியூஸ் ஊடகத்திடம் பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் தந்தை பேசுகையில், “காவல்துறைக்கு செல்ல வேண்டாம் என்றும், எங்களுக்கு பணம் தருவதாகவும் ஜார்ஜ் எங்களிடம் கூறினார். ஆனால் எங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாரின் மகளுக்கும் நேரக் கூடாது என்று என் மனைவி மறுத்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று (ஜனவரி 30) ஜார்ஜ் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இந்த செய்தி வெளியான உடனே அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இச்செய்தி வந்த மறுநாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கேரளா சென்றுள்ளார். அப்போது இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த விவகாரம் குறித்து கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் என்னிடம் தெரிவித்தார். மேலும், மாவட்ட நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதையும் கூறினார். மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க தேவைப்பட்டாலும் எடுக்கப்படும்” என்றார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி ஜார்ஜை பாதுகாக்க முயல்வதாக இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (டி.ஒய்.எஃப்.ஐ.) பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019