மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

கோயில் வளாக கடைகளை அகற்ற தடை!

கோயில் வளாக கடைகளை அகற்ற தடை!

தமிழகத்தில் கோயில் வளாகங்களில் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில் வளாகங்களில் கடைகளை அமைக்கத் தமிழக அரசு தடை விதித்தது.

தமிழகம் முழுவதும் உள்ள 35,000 கோயில்களில் உள்ள 4 லட்சம் கடைகளை காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கடைகளைக் காலி செய்வதற்குக் கால அவகாசம் வேண்டுமென்று கடை உரிமையாளர்கள் கூறியிருந்தனர்.

அதன்படி, அறநிலையத் துறையின் உத்தரவை ஏற்று நாளைக்குள் (ஜனவரி 31) அனைத்துக் கோயில் கடைகளையும் அகற்ற உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon