மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

திருமணப் பரிசாக மோடிக்கு வாக்களியுங்கள்!

திருமணப் பரிசாக மோடிக்கு வாக்களியுங்கள்!

தங்களது திருமணப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என கர்நாடக மாநிலத்து ஜோடியொன்று வெளியிட்டுள்ள அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் தேவாங்கிரே பகுதியைச் சேர்ந்த நாகராஷ் மற்றும் ரேகா என்ற ஜோடிக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்காக இவர்கள் அச்சடித்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தங்களது திருமணத்திற்கு வருபவர்கள், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் வாக்களிப்போம் என்ற வாக்குறுதியைத் திருமணப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசின் ஸ்வாச் பாரத் திட்ட வாசகங்களும், விழிப்புணர்வுக் கருத்துகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்பு, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த யுவராஜ், சாக்சி தம்பதி ரபேல் போர்விமானங்கள் விவகாரத்தில் மோடி அரசின் சரியான செயல்பாடு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகள் குறித்துத் தங்களது திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் வரவுள்ள தேர்தலில் மோடிக்கு வாக்கு அளிக்குமாறும் கேட்டிருந்தனர்.

இது மோடியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர், அந்த தம்பதியினரைப் பாராட்டிக் கடிதம் அனுப்பினார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon