மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

அடுத்த மாதம் முதல் யமகாவின் புதிய பைக்!

அடுத்த மாதம் முதல் யமகாவின் புதிய பைக்!

யமகாவின் எம்.டி15 பைக் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த பைக்கின் அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் யமகா நிறுவனத்தின் எம்.டி15 பைக் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்த பைக் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட யமகா டீலர்களிடம் மட்டும் முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. யமகா ஆர்15 பைக்கில் பயன்படுத்தப்பட்ட அதே எஞ்சின் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. உச்சபட்சமாக 19 குதிரைத்திறன் சக்தியை இந்த எஞ்சின் உருவாக்கும். இதுவும் ஆர்15 பைக்கிற்கு நிகரானது. இந்த பைக்கில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உள்ளது. தினசரி பயன்பாட்டுக்கான ஒரு பைக்காகவே இதை யமகா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மேலும், நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு வசதியான வாகனமாக உள்ளது. இந்த பைக்கில் 155 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. லிக்விட் கூலிங் தொழில்நுட்பத்துடன் எஞ்சின் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மோட்டார் சைக்கிள்களில் 150சிசி பிரிவில் உள்ள மற்ற பைக்குகளைக் காட்டிலும் இந்த பைக்கின் எஞ்சின் மிகவும் மேம்படுத்தப்பட்டதாகும். ஆர்15 பைக்கை காட்டிலும் எம்.டி15 பைக் எடை குறைவானதாகவே இருக்கும். குறைந்த எடையால் நகர்ப்புறங்களில் ஓட்ட வசதியாக அமையும். ஆர்15 பைக்கின் விலை ரூ.1.4 லட்சமாக உள்ளது. இதை விட சுமார் ரூ.10,000 குறைவாக எம்.டி15 பைக்கின் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon