மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்குவார்கள்: அமெரிக்கா!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்குவார்கள்: அமெரிக்கா!

பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்துவார்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் டேன் கோட்ஸ் பேசுகையில், “பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் சில குழுக்களை கொள்கைக் கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதக் குழுக்களை மட்டும் எதிர்த்து வருகிறது. இதனால் தாலிபானுக்கு எதிரான பயங்கரவாத ஒழிப்பு முயற்சிகளை எடுத்து வரும் அமெரிக்கா நிச்சயமாக எரிச்சலடையும். பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாதக் குழுக்கள் தங்களது பாதுகாப்பான புகலிடமாகப் பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்கா சார்ந்த இடங்களிலும் தாக்குதல் நடத்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

டேன் கோட்ஸ் உட்பட அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் முக்கிய உயரதிகாரிகள் செனட் புலனாய்வு குழுவிடம் இவ்விவரங்களைத் தெரிவித்தனர். உலகளவில் இருக்கும் அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐஏ இயக்குநர் கினா ஹேஸ்பெல், எஃப்பிஐ இயக்குநர் கிரிஸ்டொபர் ரேய், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ராபர்ட் ஆஷ்லே ஆகியோரும் கலந்துகொண்டனர். 2019ஆம் ஆண்டில் உலகளவில் இருக்கும் அச்சுறுத்தல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டு செனட் குழுவிடம் எழுத்துப்பூர்வ ஆவணமாகச் சமர்ப்பித்துள்ளன.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon