மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

ஜெ. பாணியில் தேர்தலை எதிர்கொள்வோம்: கே.பி.முனுசாமி

ஜெ. பாணியில் தேர்தலை எதிர்கொள்வோம்: கே.பி.முனுசாமி

“மக்களவைத் தேர்தலை ஜெயலலிதா பாணியில் எதிர்கொள்வோம்” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேவைப்பட்டால்தான் கூட்டணி என்று துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கூறிக் கொண்டிருக்க, மக்களவைத் தேர்தலில் நாங்கள் ஜெயலலிதா வழியை பின்பற்றுவோம் என்று கூறுகிறார் அதிமுக மூத்தத் தலைவர் தம்பிதுரை. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்கவில்லை. எனவே ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு அவ்வாறே செயல்படும் என நம்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் கூட்டணி விஷயத்தில் அதிமுகவின் மூத்த தலைவரும் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, இன்னொரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 30) தனியார் ஊடகத்திடம் பேசிய கே.பி.முனுசாமி, “தேர்தல் நடவடிக்கைகளில் அதிமுக என்றுமே முன்னிலை வகிக்கும்.தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அதுகுறித்த நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்க ஆரம்பித்துவிடுவார். அவ்வகையில்தான் ஜெயலலிதா வழியில் செயல்படும் ஈபிஎஸ், ஓபிஎஸ் விருப்ப மனுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் இருப்பதால், 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட பிறகுதான் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று ஒதுக்கப்படும். கூட்டணி உறுதியாகும் வரை பேச்சுவார்த்தை குறித்த ரகசியங்களைக் கூற முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon