மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

மருத்துவமனையை ஒழுங்குபடுத்தும் அரசாணை: அரசுக்கு உத்தரவு!

மருத்துவமனையை ஒழுங்குபடுத்தும் அரசாணை: அரசுக்கு உத்தரவு!

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்களை ஒழங்குபடுத்த அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை ஒழங்குபடுத்துவது குறித்து, கடந்தாண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. “மருத்துவமனைகள் 100 சதுர அடியில் இருக்க வேண்டும். நோயாளிகள் உட்காரத் தனி அறை இருக்க வேண்டும். காது மூலமாக நோயாளியின் உடல் வெப்பத்தை கண்டறியும் கருவி உட்பட நவீன கருவிகள் வைத்திருக்க வேண்டும்” என்று பல கட்டுப்பாடுகள் அதில் இடம்பெற்றிருந்தன.

2019 ஜனவரி முதல் இந்த அரசாணை அமலுக்கு வந்தது. இந்த நிலையில், இதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த மருத்துவர் வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் செயல்படும் மருத்துவமனைகள் நோயாளிகளுக்குக் குறைவான தொகையைக் கட்டணமாக வசூலித்து வருவதாகவும், இந்த அரசாணையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019