மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

துணிகளை மடிக்கும் ரோபோ: விரைவில் விற்பனை!

துணிகளை மடிக்கும் ரோபோ: விரைவில் விற்பனை!

துணிகளை மடிக்கும் புதிய ரோபோவை இஸ்ரேலைச் சேர்ந்த ஃபோல்ட்மேட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

துணிகள் சலவை செய்யப்பட்ட பிறகு அவற்றை மடித்து வைப்பது மிகவும் அயர்ச்சியை ஏற்படுத்தும். இதற்காகவே புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு சாதனங்கள் கண்காட்சியில் ஃபோல்ட்மேட் என்ற துணி மடிக்கும் இயந்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த இயந்திரம் உங்களது துணிகளை ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மடித்துவிடும். இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ள ஃபோல்ட்மேட் நிறுவனம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்ததாகும். சட்டைகள், பேண்ட், ரவிக்கைகள் என பல ரகங்களிலான ஆடைகளையும் இந்த ரோபோ மடித்துவிடும் என்று ஃபோல்ட்மேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக பயன்படுத்தப்படும் துண்டுகள், தலையணைகள் போன்றவற்றையும் இந்த இயந்திரம் உடனடியாக மடித்து வைத்துவிடுகிறது. ஒவ்வொரு துணியாக இயந்திரத்திற்குள் வைத்தால் சில நொடிகளிலேயே மடித்துக் கொடுத்துவிடுகிறது. ஃபோல்ட்மேட் இயந்திரங்களை குறைந்தபட்சமாக 980 அமெரிக்க டாலருக்கு (ரூ.69,742) விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. எனினும், இயந்திரத்தின் இறுதி விலையும், இயந்திரம் வெளியிடப்படும் தேதியும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ஃபோல்ட்மேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon