மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

பழமொழி போய் அடைமொழி வந்துருச்சு: அப்டேட் குமாரு

பழமொழி போய் அடைமொழி வந்துருச்சு: அப்டேட் குமாரு

அடுத்த பிரதமர் மோடி இல்லன்னு சொன்னதோட இல்லாம எதிர் கட்சிகளுக்குள்ள சண்டை வந்துடக் கூடாதுன்னு ஆளுக்கு ஒரு கிழமையை பிரிச்சுக் கொடுத்துருக்குற அமித்ஷா உண்மையிலேயே கிரேட் தான். அவர் சொன்ன லிஸ்ட்டுல ஸ்டாலினுக்கு சனிக் கிழமை ஒதுக்குனதுக்கு இங்க சில பேருக்கு பிடிக்கலை. வீக் என்டா பார்த்து கொடுத்துட்டாரேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா இன்னொரு பக்கம் வெள்ளிக் கிழமை ராமசாமி மாதிரி சனிக்கிழமை ஸ்டாலின்னு அடைமொழி போட்டு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. பழமொழி போய் அடைமொழி வந்தா நல்லது தான, அப்டேட்டை பாருங்க.

@ரைட்டர் பேயோன்

நாம் சாவதற்கு முன்பு படிக்க வேண்டிய 100 புத்தகங்கள் என்று ஒரு பட்டியலைப் பார்த்தேன். என்னவோ நாம் எப்போது சாவோம் என்று எல்லோருக்கும் முன்பே தெரிந்த மாதிரி.

@Theo Rio

Future?? என்கிற ஒற்றைக் கேள்விக்குள்ளேயே சிக்கித் தவித்து போராடிக் கொண்டிருக்கிறது பேச்சிலர்களின் கிட்னி

@அ.ப. இராசா

கடன் வாங்குனவன் எல்லாம் ராத்திரி தான் ஆன்லைன் வாரானுக. வெரிபைடு!

@Kozhiyaar

நாம் வீழ்ந்தால் நம்மிடம் இருக்கும் பொருளை நம்முடன் இருப்பவரே எடுத்துக் கொள்வார் என்னும் வாழ்க்கை தத்துவத்தை எளிதாக புரிய வைத்து விடுகிறது PUBG!!

@ShivaP_Offl

கணவன்- பிரியாணியை சாணி மாதிரி இவ்வளவு கேவளமா எதுக்கு சமைச்சு இருக்க?

மனைவி- இந்த மனுசன் சாணியைகூட டேஸ்ட் பண்ணி இருப்பான் போலயே? ஓ மை கார்ட்

@ரைட்டர் பேயோன்

ஆபீசுக்குப் போய்க் குப்பை கொட்ட வேண்டாம். அதற்கு பதிலாக நாலு பூனை, நாலு நாய் வாங்குங்கள். அவற்றின் சேட்டைகளை தினமும் கைபேசியில் வீடியோ எடுத்து இணையத்தில் போடுங்கள். பணம் கொட்டும்.

@Annaiinpillai

மெகா கூட்டணியில் நாளுக்கொரு பிரதமர்: அமித்ஷா கிண்டல் # உங்க பக்கோடா மேட்டர உலகமே கிண்டல் அடிச்சது தெரியாதா பாஸ்?!

@ajmalnks

அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தால் தான் காவிரி நீரை பெற்றுத்தர முடியும் - தம்பிதுரை,

இவ்வளவு நாள் கோமாவுல இருந்திருப்பாங்க போல.

@HAJAMYDEENNKS

`மதுரைக்காரர்கள் உயிரையும் கொடுப்பார்கள்; உயிரையும் எடுப்பார்கள்!' - செல்லூர் ராஜூ #

விஷால் படம் நிறைய பார்ப்பார் போல !

@Kozhiyaar

எவரிடம் திட்டு வாங்கினாலும் மறைத்துவிடும் ஆண்கள், மனைவியிடம் வாங்கும் திட்டை மட்டும் பெருமையுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம்!!!

@Thaadikkaran

நாம வாங்கிட்டு வந்த பொருளை யாரேனும் அதிக விலை என்று சொன்னால், எனக்கு தெரியும் உன் வேலையை பாரு என கோபத்தை காட்டி விடுவது டிசைன்..!!

@mohanramko

ஒரு வாரம் லீவு முடிந்து ஆபிசுக்கு வந்தா, கல்யாண பொண்ணு முதல் முறையா புருஷன் வீட்டுக்கு வந்த மாதிரி 'உனக்கு தெரியாது, இங்கதான் கிச்சன் இருக்கு, பாத்ரூம் இருக்கு' என்று ரீதியில் பேசுகிறார்கள் உடன் பணிபுரிபவர்கள்

@Thaadikkaran

பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பொன்னையனின் கருத்து அதிமுகவின் கருத்து இல்லை - தமிழிசை

கூட்டு குடும்பத்தில் குழப்பம் வரலாமா, கரிசல் காட்டு பூமியில் விரிசல் விழலாமா..!!

@ajmalnks

அன்னா ஹசாரேவும் ஜெ.தீபாவும் ஒன்னு.

எப்ப தூங்குவாங்க எப்ப கோமாவுல இருந்து முழிப்பாங்க எப்ப அறிக்கை விடுவாங்கன்னு அவங்க ரெண்டு பேருக்குமே தெரியாது.

@RahimGazzali

ராகுல்காந்தி கூறும் குறைந்தபட்ச வருமான திட்டம், ஏமாற்று வேலை!- பொன்.ராதாகிருஷ்ணன்

ஒவ்வொருத்தர் அக்கவுண்ட்லேயும் தலா 15 லட்சம் போட்ட கட்சிக்காரரு சொல்றாரு, கேட்டுக்கங்க.

@Annaiinpillai

அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தால் தான் காவிரி நீரை பெற்றுத்தர முடியும் - தம்பிதுரை,எம்.பி#

பரவால நாங்க மினரல் வாட்டரே குடிச்சிக்கிறோம் -மக்கள்!

@mohanramko

அம்மாவை எவ்வளவு தூரம் அழைத்து சென்றாலும், சமையலறையில் இருந்து வெளியே வர வைக்க இயலவில்லை....

'நைட் என்னடா டிபன் பண்ணட்டும்'

@Annaiinpillai

தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்# குட்கா மட்டும் விற்கலாமா பாஸ்?!

@Thaadikkaran

பிரதமர் வராத பாதையில் வைகோ கருப்புக்கொடி காட்டியுள்ளார் - ஹெச்.ராஜா

கருப்பு கொடி காட்டுறாங்கன்னு வேறு பாதைல போய்ட்டார்ன்னு சொல்லுங்கப்பு..!!

-லாக் ஆஃப்

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019