நியூசிலாந்தைக் கலக்கும் ஸ்டார் ஜோடி!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது மனைவியுடன் நியூசிலாந்தில் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள், டெஸ்ட் தொடர்களை வென்று அதே புத்துணர்ச்சியுடன் கோலி தலைமையிலான அணி நியூசிலாந்து தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி எஞ்சியுள்ள போட்டிகளையும் டி20 தொடரையும் எதிர்கொள்ள உள்ளது. அடுத்ததாக இந்தியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தான் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். இதற்கிடையே அவருக்குக் கிடைத்துள்ள சுமார் ஒரு மாத ஓய்வை அவர் தனது மனைவியுடன் கழித்துவருகிறார்.
புல்தரையில் அனுஷ்காவும் விராட் கோலியும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனியார் ஜெட் விமானம் ஒன்றில் இருவரும் ஜோடியாகப் பயணித்த படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நியூசிலாந்தில் இருவரும் சேர்ந்து பயணிக்கும் ஒவ்வொரு இடத்தையும் புகைப்படங்கள் வாயிலாக அவர்கள் பகிர்வது போல அவர்களது ரசிகர்களும் பல புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.