மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 பிப் 2019

மார்ச் இறுதிக்குள் பணம் கிடைக்கும்!

மார்ச் இறுதிக்குள் பணம் கிடைக்கும்!

மார்ச் மாத இறுதிக்குள் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று வேளாண் துறை இணையமைச்சர் கஜேந்திர ஷேக்காவத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல், “2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கிற சிறு குறு விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 வழங்கப்படும். இந்த நிதி 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். டிசம்பர் 1, 2018 முன் தேதியிட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும். நடப்பு நிதியாண்டில் இதற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் முதல் தவணை மார்ச் மாதத்துக்குள் செலுத்தப்படும் என்று வேளாண் துறை இணையமைச்சர் கஜேந்திர ஷேக்காவத் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “பிரதான் மந்திரி கிஷான் சம்மதி நிதி திட்டத்தின் கீழ் 10 கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ.2,000 முதல் தவணையாக மார்ச் மாதத்துக்குள் செலுத்தப்படும். முதல் தவணை செலுத்துவது எளிமையான ஒன்றல்ல. எல்லா பயனாளிகளும் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் இது எளிமையாகிவிடும்” என்றார்.

பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் நில உடைமையாளர்கள் குறித்த தரவுகள் முழுமையாக டிஜிட்டலாக்கப்படாத காரணத்தால் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவது மிகுந்த சிரமமான ஒன்று என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனாலும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால் சிறு விவசாயிகளின் ஆதரவைப் பெற பாஜக நிதி விநியோகத்தை துரிதமாக மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய விவசாயிகளின் பட்டியலை மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனாலும் சொத்துகள் குறித்த பட்டியல் மத்திய அரசிடமும் உள்ளது. எங்களிடம் உள்ள தரவுகளில் உள்ள விவசாயிகள் பலர் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களில் பயன்பெற்று வருகின்றனர். மண் வள அட்டைகளும் முக்கிய தரவாக பயன்படும்” என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 4 பிப் 2019