மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

வேலைவாய்ப்பை அள்ளிக்கொடுக்கும் ஐடி நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பை அள்ளிக்கொடுக்கும் ஐடி நிறுவனங்கள்!

நாட்டின் மிகப்பெரிய 4 ஐ.டி. நிறுவனங்கள் 9 மாதங்களில் 70,000 பேரை புதிதாக நியமித்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய 4 ஐடி நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்ஃபோசீஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல்.டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்களில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் 70,000 பேரை நியமித்துள்ளன. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும். 2017-18ஆம் நிதியாண்டில் 13,972 பேர் மட்டுமே புதிதாக இந்நிறுவனங்களில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதில் டி.சி.எஸ். நிறுவனம் 22,931 பேரை நியமித்துள்ளது. மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி பிரிவில் மட்டும் 3,657பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்ஃபோசீஸ் நிறுவனம் 21,398 பேரை நியமித்துள்ளது. ஆனால் 2017-18 முழு நிதியாண்டிலும் இந்நிறுவனம் 3,743 பேரை மட்டுமே நியமித்திருந்தது. ஹெ.சி.எல். நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் 12,247 பேரை நியமித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் 4,108 பேரை மட்டுமே நியமித்திருந்தது. விப்ரோ நிறுவனம் 12,456 பேரை நியமித்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டில் பல்வேறு நெருக்கடிகளை ஐ.டி. நிறுவனங்கள் சந்தித்துள்ளன. குறிப்பாக வாடிக்கையாளர்களின் வேகமான டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றம், வழக்கமான தொழில் அழுத்தங்கள், தானியங்கிமயம் மற்றும் சந்தையில் வளர்ந்து வரும் பாதுகாப்புவாதம் ஆகிய பல்வேறு நெருக்கடிகளை 2018-19ஆம் நிதியாண்டில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் சந்தித்துள்ளன.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon