மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சிவப்பு ஆடைக்குத் தடை: வழக்கு!

சிவப்பு ஆடைக்குத் தடை: வழக்கு!

நாடு முழுவதும் சிவப்பு ஆடைக்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரித் தொடரப்பட்ட பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுநல மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதைத் தினமும் மேற்கொண்டு வருகிறது உச்ச நீதிமன்றம். பல முக்கியப் பிரச்சினைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் எழுப்பாதபோது, அதற்குப் பொதுநல மனுக்கள் தீர்வைக் காட்டியுள்ளன. கடந்த காலத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த ஒரு பொதுநல மனுவின் சாராம்சம் கண்டு நீதிபதிகள் கொதித்தெழுந்தனர்.

சிவப்பு நிற ஆடை அணிவதற்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராக பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார் வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா. அவரது மனுவைப் படித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இது கேலிக்கூத்தானது என்று கருத்து தெரிவித்தது. அது மட்டுமல்லாமல், மனுதாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சிகரெட் பாக்கெட்டில் எழுதப்பட்டிருப்பது போன்ற படங்களுடன் கூடிய வாசகங்கள் மது பாட்டில்களிலும் இடம்பெற வேண்டும், தசரா விழாவில் ராவணனின் கொடும்பாவி எரிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும், இணையதளங்களில் சர்தார்ஜிக்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளைத் தடை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு பொதுநல மனுக்கள், இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon