மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

யானையை சுண்டெலி தடுக்க முடியுமா? தமிழிசை கேள்வி!

யானையை சுண்டெலி தடுக்க முடியுமா? தமிழிசை கேள்வி!

சின்ன கூட்டம்தான் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதாகவும், யானையை சுண்டெலி தடுக்க முடியுமா எனவும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இந்தப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க இன்று (பிப்ரவரி 4) தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூர் வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மோடி எங்கு வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவோம் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இந்த சின்ன கூட்டத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், யானையை சுண்டெலி தடுத்திட முடியும் என்று நினைத்தால் எப்படி முடியும்?

நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் திட்டங்களை அறிவிப்போம் என்று சொல்கின்றோம். ஆனால் வைகோ போன்றவர்கள் கருப்புக்கொடி காட்டுவோம் என்று சொல்கின்றனர். மக்களுக்கு திட்டங்களை ஆரம்பித்து வளர்ச்சி பாதைக்கு தமிழகத்தை எடுத்துச் செல்லும் மோடி வேண்டுமா கிளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் கருப்புக்கொடி காட்டும் தலைவர்கள் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தமிழக மக்கள் பாஜகவின் பக்கம் நிற்பார்கள். 2019 தேர்தல் அதை நிரூபிக்கும்” என்றார்.

மேலும், “10 ஆம் தேதி பிரதமர் வருவதை அடுத்து ஏற்பாடுகளைக் கவனிக்க திருப்பூரில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கலந்துகொள்கிறார். 12ஆம் தேதி திருநெல்வேலிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 14ஆம் தேதி ஈரோட்டிற்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, 15ஆம் தேதி சென்னைக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் வாக்குச்சாவடி முகவரிகளை உற்சாகப்படுத்த வரவுள்ளனர்” என்றும் தமிழிசை தெரிவித்தார்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon