மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

முல்லைப் பெரியாறு பகுதிகளில் கட்டிடங்களுக்கு தடை கேட்டு மனு!

முல்லைப் பெரியாறு பகுதிகளில் கட்டிடங்களுக்கு தடை கேட்டு மனு!

முல்லைப் பெரியாறு பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட கேரள அரசுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள தமிழகத்துக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கார் பார்க்கிங் ஒன்றைக் கட்டுவதற்கு கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, கட்டிடம் கட்ட கேரள அரசுக்கு அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இவ்விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 3) மீண்டும் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கட்டிடம் கட்ட கேரள அரசுக்குத் தடை விதிக்க வேண்டும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon