மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

நேரடி அந்நிய முதலீடு சரிவு!

நேரடி அந்நிய முதலீடு சரிவு!

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நேரடி அந்நிய முதலீடு 11 விழுக்காடு குறைந்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் (2018-19) ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் 22.66 பில்லியன் டாலர் மதிப்பிலான நேரடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைக் காட்டிலும் 11 விழுக்காடு குறைவாகும். 2017-18 நிதியாண்டின் முதல் அரையாண்டில் 25.35 பில்லியன் டாலர் மதிப்பிலான நேரடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருந்தது.

அதிகபட்சமாக சேவைத் துறையில் 4.91 பில்லியன் டாலரும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் 2.54 பில்லியன் டாலரும், தொலைத்தொடர்பு துறையில் 2.17 பில்லியன் டாலரும், வர்த்தகத் துறையில் 2.14 பில்லியன் டாலரும், ரசாயனங்கள் துறையில் 1.6 பில்லியன் டாலரும், வாகன தொழில்துறையில் 1.59 பில்லியன் டாலரும் நேரடி அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு சரிவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஒரு காரணமாக உள்ளது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon