மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

எடப்பாடியின் காதலர் தினப்பரிசு: அப்டேட் குமாரு

எடப்பாடியின் காதலர் தினப்பரிசு: அப்டேட் குமாரு

இடைத் தேர்தலை இப்ப நடத்த போறோம், அப்ப நடத்த போறோம்னு தள்ளிப் போட்டு கடைசியில பொதுத் தேர்தல் வரைக்கும் ஓட்டிடுவாங்களோன்னு தோணுது. இடைத் தேர்தலை எப்ப நடத்தனும்னு நேத்து நைட் ஒரு கருத்து கணிப்பு நடத்துனேன். பாதிக்கும் மேல பிப்ரவரி 14க்குள்ள நடத்துங்கன்னு சொல்லிருக்காங்க. அதுல பள்ளிக்கூடத்துல படிக்குற பசங்க வேற பத்து பேரு இருந்தாங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சா காதலர் தினத்துக்கு கிஃப்ட் வாங்கிக்கொடுக்கனுமாம். எலெக்‌ஷன் வச்சா செலவுக்கு வழி வந்துடும்னு சொல்றாங்க. அதுல கொஞ்சம் பேர் இடைத் தேர்தல் நடத்த முடியாட்டாலும் பரவாயில்லை, பொங்கலுக்கு கொடுத்த மாதிரி காதலர் தினத்துக்கும் ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா நல்லா இருக்குங்கிறாங்க. எல்லை மீறி போறாங்கப்பா.. அப்டேட்டை பாருங்க.

@amuduarattai

குழந்தைகள் மீது "மணல் கடத்தல்" வழக்கே போடலாம் போல. ஸ்கூல் குழந்தைகள் ஷூவுக்குள்ளே அவ்வளவு மணல் இருக்கு.

@shivaas_twitz

சின்ன வயசுல நம்மை யார் வீட்டுக்காவது கூட்டிட்டு போனா, புது இடமாச்சேனு வாலை சுருட்டிக்கிட்டு நல்ல பையன் மாதிரியே கொஞ்ச நேரம் இருப்போம்...

வளர்ந்த பிறகு, அதையே தான் பொண்ணு பார்க்க போகும் போதும் பண்றோம்..!

@ival_Saranallu

"கட்டிக்கிட்டவன் கண் கலங்கவிட மாட்டான்" என்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது ஒவ்வொரு பெண்ணின் நம்பிக்கையும்!

@mohanramko

தலை சீவிய பின், சீப்புல முடி இருக்கானு பார்த்தா மனுஷன், தலையில முடி இருக்கானு பார்த்தா பெரிய மனுஷன்..

@Wasim_twitz

February 14 காதலர்கள் தினம் மட்டும் அல்ல அவர்களின் நண்பர்களுக்கு அது கருப்பு தினமாகவும் பார்க்கப்படுகிறது

இந்த தடவ எங்க அடி வாங்கி தரபோறான்களோ

@mohanramko

வேலை இல்லாதவங்களுக்கு 'என்ன செய்றதுன்னே தெரியாம பொழுது போகுது'....

வேலையில இருக்கிறவங்களுக்கு 'என்ன செய்றோம்னு தெரியாமலே பொழுது போகுது'

@shivaas_twitz

தேர்தல் நெருங்குது...

கூட்டணி பேச்செல்லாம் தொடங்கியாச்சு

இனி எல்லா கட்சிகளுக்கும் ஒரே கொள்கை தான்...

'சோறு தான் முக்கியம்... பசிக்கும்ல..?'

@Kozhiyaar

நாம் கைப்பேசியில் எவரின் அழைப்பை தவிர்க்க நினைக்கிறோமோ, அவரின் அழைப்பை மகள் எடுத்து 'அப்பா உங்களுக்கு ஃபோன்' என்று கொண்டு வந்து நம் கையில் கொடுப்பது மோசமான டிசைன்!!

@craziie_abu

நகை கடைக்கு செல்லும் போது உள்ளே தரும் உபசரிப்பு...நாமும் பணக்காரன்தானோ எனும் எண்ணத்தை சிறிது உதயம் ஆக்குகிறது...

@sultan_Twitz

"மத்திய பட்ஜெட்டை பிரதமர் வாஜ்பாய் தாக்கல் செய்தார்!"- திண்டுக்கல் சீனிவாசன் #

கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதுனப்ப, மத்திய பட்ஜெட்டை வாஜ்பாய் தாக்கல் செஞ்சிருப்பாரு..?!

@RahimGazzali

சேலம் அமெரிக்கா போல் மாறி வருகிறது - எடப்பாடி பழனிசாமி #

அப்படியே எடப்பாடிதான் லாஸ் ஏஞ்சல்ஸ், ஆத்தூர்தான் ஃபிலடெல்பியா, சங்ககிரிதான் கலிஃபோர்னியா, மேட்டூர்தான் நியூயார்க், ஏற்காடுதான் டெக்‌சாஸ் என்றும் அடித்துவிடுங்க. கையைத்தட்டத்தான் ஆளிருக்கே?...

@Arunkum61188707

இதே நிகழ்வு தமிழகத்தில் நடந்திருந்தால் எடப்பாடி என்ன செய்திருப்பார்..?

எடப்பாடிக்கு இந்த விசயமே தெரிய வந்திருக்காது. கிரிஜா வைத்தியநாதனே அந்த கமிஷனரை அனுப்பி வைத்திருப்பார்.

@Annaiinpillai

ரோட்டில் எதிரே வருபவர் நம் கண் முன்னே தவற விட்ட பணத்தை கவனிக்காமல் நம்மை கடந்து சென்றால் அந்த பணத்தை எடுத்து அவருக்கு கொடுக்கலாமா வேண்டாம என்று யோசிப்பதில் நமக்குள் இருக்கும் நல்லவனும் கெட்டவனும் ஒரு நிமிடம் எட்டி பார்ப்பது டிசைன்!

@mohanramko

சிக்னல் விழும் 30 நொடிக்குள், ஒரு வள்ளலை கண்டுபிடித்து விடுகிறார்கள், கையேந்தும் பிச்சைக்காரர்கள்...

@RahimGazzali

பச்சைப்போர்வை, கத்தரி என்று ஹாஸ்பிடலுக்குரிய அட்மாஸ்பியரை சலூனும் தந்துவிடுகிறது.

@SubashiniBA

முதலில் உங்கள் வீட்டை கவனியுங்கள் ஏனெனில் தனது வீட்டை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது- மத்திய அமைச்சர் நிதின்கட்கரி

இது ஏழைத்தாயின் மகன் மோடிக்கும் பொருந்துமா!!

@Thaadikkaran

இப்போ ஸ்டைல்ன்னு நாமே போட்ட ட்ரெஸ்ஸே ஒரு மூணு நாலு வருஷம் கழிச்சு போட்டோல பார்த்தா, இவ்வளவு காமெடியாவா ட்ரெஸ் பண்ணிருக்கோம்னு நினைக்க தோணும்..!!

@sultan_Twitz

"காட்டு யானை சின்னத்தம்பியை பிடிப்பதே முதல் இலக்கு" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் #

எதுக்கும் பிரதமர் வாஜ்பாய் கிட்ட ஆலோசனை பன்னிக்கோங்க?!

-லாக் ஆஃப்

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon