மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 பிப் 2019

சபரிமலை: இரு பெண்கள் மட்டுமே தரிசனம்!

சபரிமலை: இரு பெண்கள் மட்டுமே தரிசனம்!

சபரிமலையில் இதுவரை இரண்டு பெண்கள் மட்டும்தான் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சபரிமலை கோயிலுக்குள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தரிசனம் செய்ததாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பெண்களின் பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கேரள அரசு பொய்யான தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது என்று எதிர்ப்புகள் எழுந்தன. ஆன்லைன் விண்ணப்பப் பட்டியலில் பதிவு செய்த ஆதார் எண்களை சோதித்தபோது, அது ஆண்களுடையதாக இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 4) நடந்த கேரள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அம்மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிக்கையொன்றைத் தாக்கல் செய்தார். “சபரிமலை கோயிலில் இதுவரை 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். இந்தாண்டு சபரிமலை கோயில் வருமானம் ரூ.180.18 கோடியாகும். கடந்தாண்டு ரூ.279.43 கோடியாக இருந்தது. 100 கோடிக்கும் மேல் வருமானம் குறைந்துள்ளது. இலங்கை பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்தது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

திங்கள் 4 பிப் 2019